மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் 03.04.2024 அன்று புதுநகரில் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடமாடும் சேவை இடம்பெற்றது.


இதில் அசுவெஸ்ம, பிறப்பு இறப்பு பதிவு, தேசிய அடையாள அட்டை புகைப்படம் எடுத்தல், ஆயுள்வேத வைத்திய சிகிச்சை மற்றும் சமூக பராமரிப்பு நிலையத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள் அத்துடன் இணைந்த Family Plan Association நிறுவனத்தினால் பெண் நோயியல் தொடர்பான சேவையும் வழங்கப்பட்டது.


இதில் உதவி பிரதேச செயலாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி, ஆயுள்வேத வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் திருப்பெருந்துறை, திமிலைதீவு, சேத்துக்குடா, வீச்சுகல்முனை, ஆகிய பிரிவுகளில் இருந்து பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் "மட்டு முயற்சியாண்மை 2024" எனும் தொனிப்பொருளில் 26.03.2024 உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி நடை பெற்றது .







சமுர்த்தி புளியந்தீவு மகா சங்கத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்று சென்ற அருணன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 07.03.2024 அன்று இடம்பெற்றது.








சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 14.03.2024 அன்று காந்தி பூங்கா வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வின் ஆரம்ப கட்டமாக விழிப்புணர்வு நடைபவனி பிரதேச செயலகத்திலிருந்து காந்தி பூங்கா வரை இடம்பெற்றது.இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நா.தனஞ்சயன் கலந்து கொண்டனர்.



இதில் சிறந்த மகளிர் சங்கம், சிறந்த மாதர் அபிவிருத்தி சங்கங்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளராக கோகிலாதேவி ரஞ்சித்குமார் என்பவருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் மகளிர் தின சிறப்பு பேச்சு, நடனம், நாடகம், கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.இதில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி கோறளை பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு மாற்றலாகி சென்றுள்ள ஜனாப் மு.ற. ஷியாஹுல் ஹக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 07.03.2024 அன்று இடம்பெற்றது.





















