மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றி கிழக்கு மாகாண சபைக்கு மாற்றலாகி சென்றுள்ள திரு.S.புவனேஸ்வரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 18.08.2023 அன்று இடம்பெற்றது.
 
ac1
ac2
ac3
ac4
ac5
ac6
ac7
ac8
மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் முதியோர் தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் சேற்றுக்குடாவில் முதலாவது திரிய பியச முதியோருக்கான வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
ho1
இத்திட்டத்திற்காக பிரதேச செயலாளர் வ. வாசுதேவனின் மேற்பார்வையில் மாவட்ட முதியோர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் விஷ்வகோகிலனின் எற்பாட்டில் சமூக சேவை உத்தியோகத்தர் பி.ராஜ்மோகன் தலைமையில் 02.08.2023 அடிக்கல் நடப்பட்டது.
 
ho2
அதற்கிணங்க சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டிய முதியவர்கள் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெறுகின்றது.
ho3
60 வயதுக்கு மேற்பட்ட மாதாந்த வருமானம் 6000 ரூபாய்க்கு குறைவாக பெறும் முதியோருக்கான வீட்டை நிர்மாணிப்பதற்கு அல்லது திருத்துவதற்கு தேசிய செயலகத்தினால் 7 இலட்சம் பெறுமதியான நிதியுதவியுடன் வீட்டின் நிர்மாணப் பணிகள் நடை பெறுகின்றன.
ho4
இந் நிகழ்வில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் திருமதி. நிலக்ஷி நிரூஷன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ho5
ho6
மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தேசிய ரீதியில் உள்வாங்கப்பட்டு மாகாண ரீதியில் ஆறாவது இடத்தினையும், மாவட்ட ரீதியில் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
 
360085841 585638957072430 7312104530903567687 n
இதற்கு அமைவாக பிரதேச செயலகம் சார்பில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர், சமூக பாதுகாப்பு சபை உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளை இணைத்துக்கொண்ட இரண்டு உத்தியோகத்தர்களும் பிரதேச செயலகம் சார்பில் (Blue velvet, Medals and certificate) வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
 IMG 20230718 WA0006
 
IMG 20230718 WA0009
 
IMG 20230718 WA0007
இந்நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் டேபா மண்டபத்தில் 17.07.2023ம் திகதி இடம்பெற்றது.
இதில் சமூக பாதுகாப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அத்தோடு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
IMG 20230718 WA0011
 
IMG 20230718 WA0012
 
IMG 20230718 WA0014
 
IMG 20230718 WA0013

மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச காணிகளில் காணப்படும் தீர்க்கப்படாத காணிப் பிணக்குகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணி தொடர்பான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

mo1

mo5

இந் நடமாடும் சேவையானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கமைவாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் ஏற்பாட்டில் 13.07.2023 திகதி பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது.

mo2

 

கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி.தசநாயக்கவின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற நடமாடும் சேவையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

mo3

 

இதன் போது காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகள், அரச குத்தகை காணிகள் போன்ற காணிப் பிணக்குகளுக்கு இதன் போது அதிகாரிகளினால் இயலுமானவரை தீர்வுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், மாவட்ட காணி அலுவலக உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர், மண்முனை வடக்கு நிருவாக உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தர்) மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

mo4

mo6

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து 27.05.2023 அன்று ஓய்வு பெற்ற திருமதி. கௌசிகா ஜெயராஜ் அம்மணி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 26.05.2023 அன்று பதவி அணியினர் நலன்புரிச் சங்க தலைவர் அவர்களின் தலைமையில் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

ko1

ko2

ko3

ko4

ko5

ko6

ko7

ko8

ko9

ko10

ko11

ko12

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top