
தொலை நோக்கு
முதல் தரமான சேவையை வழங்குவதனூடாக மக்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்துதல்.
பணிக்கூற்று
பிரதேச வளங்களை ஒன்றிணைத்து அரச கொள்கைத் திட்டங்களுக்கு அமைய வினைத்திறனுடனும் விளை திறனுடனும் உயர்தரமான சேவையை மக்களுக்கு வழங்குவதனூடாக நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்புதல்.
பிரதேச செயலகபின்னணியும் எல்லையும்
1981 இற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு (07) உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் காணப்பட்டதுடன் மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று மற்றும் காத்தான்குடி ஆகியவை ஒரு பிரதேச நிர்வாக அலகாகக் காணப்பட்டு பின்னர், இலகுவான நிர்வாகத்திற்காக தனித்தனி பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலகமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் மையப்பகுதியில் காணப்படுகின்றது. இதன் மொத்த பரப்பளவு 75.09 சதுரகி.மீ ஆகவும் இதில் மட்டக்களப்பு வாவி 10.83 சதுரகி.மீ கொண்டுள்ளது. இவ் பிரதேச செயலகத்தில் வாழும் மக்கள் தொகை ஏறத்தாழ 94604 ஆகும். எல்லைகளாக வடக்கு பக்கமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவும் வங்கக் கடலும், மேற்குபுறம்; மட்டக்களப்பு வாவியும், தென்புறமாக காத்தான்குடி பிரதேச செயலக பிரிவும்; மட்டக்களப்பு வாவியும், கிழக்கில் வங்கக் கடலையும் கொண்டு காணப்படுகின்றது.
எமது செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள்
| பிரதேசசெயலாளரின் பெயர் | இருந்து | வரை |
| திரு. அழகையா கிங்ஸ்லி பத்மநாதன் | 10.08.1991 | 30.06.1994 |
| திரு. செல்லையா புண்ணியமூர்த்தி | 01.07.1994 | 02.01.2000 |
| திரு. கறுவல்தம்பி கதிர்காமநாதன் | 03.01.2000 | 19.01.2005 |
| திரு. நல்லதம்பி ஸ்ரீசங்கர் | 10.01.2005 | 31.01.2006 |
| திரு. மாணிக்கம் உதயகுமார் | 01.02.2006 | 13.06.2007 |
| திருமதி. கலாமதி பத்மராஜா | 14.06.2007 | 16.03.2012 |
| திரு. சீனிவாசன் கிரிதரன் | 20.03.2012 | 12.02.2014 |
| திரு. வெள்ளக்குட்டி தவராஜா | 12.02.2014 | 23.01.2017 |
| திரு. குமாரசிங்கம் குணநாதன் | 23.01.2017 | 31.07.2018 |
| திரு. மாணிக்கவாசகர் தயாபரன் | 01.08.2018 | 03.07.2019 |
| திருமதி .ந.முகுந்தன் | 04.07.2019 | 04.07.2019 |
| திரு. வ.வாசுதேவன் | 05.07.2019 | 31.01.2025 |
| திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம் | 03.02.2025 |











