front

தொலை நோக்கு

முதல் தரமான சேவையை வழங்குவதனூடாக மக்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்துதல்.

பணிக்கூற்று

பிரதேச வளங்களை ஒன்றிணைத்து அரச கொள்கைத் திட்டங்களுக்கு அமைய வினைத்திறனுடனும் விளை திறனுடனும் உயர்தரமான சேவையை மக்களுக்கு வழங்குவதனூடாக நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்புதல்.

பிரதேச செயலகபின்னணியும் எல்லையும்

1981 இற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு (07) உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் காணப்பட்டதுடன் மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று மற்றும் காத்தான்குடி ஆகியவை ஒரு பிரதேச நிர்வாக அலகாகக் காணப்பட்டு பின்னர், இலகுவான நிர்வாகத்திற்காக தனித்தனி பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டன.


மண்முனை வடக்கு பிரதேச செயலகமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் மையப்பகுதியில் காணப்படுகின்றது. இதன் மொத்த பரப்பளவு 75.09 சதுரகி.மீ ஆகவும் இதில் மட்டக்களப்பு வாவி 10.83 சதுரகி.மீ கொண்டுள்ளது. இவ் பிரதேச செயலகத்தில் வாழும் மக்கள் தொகை ஏறத்தாழ 94604 ஆகும். எல்லைகளாக வடக்கு பக்கமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவும் வங்கக் கடலும், மேற்குபுறம்; மட்டக்களப்பு வாவியும், தென்புறமாக காத்தான்குடி பிரதேச செயலக பிரிவும்; மட்டக்களப்பு வாவியும், கிழக்கில் வங்கக் கடலையும் கொண்டு காணப்படுகின்றது.

எமது செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள்

பிரதேசசெயலாளரின் பெயர் இருந்து வரை
திரு. அழகையா கிங்ஸ்லி பத்மநாதன் 10.08.1991 30.06.1994
திரு. செல்லையா புண்ணியமூர்த்தி 01.07.1994 02.01.2000
திரு. கறுவல்தம்பி கதிர்காமநாதன் 03.01.2000           19.01.2005
திரு. நல்லதம்பி ஸ்ரீசங்கர் 10.01.2005 31.01.2006
திரு. மாணிக்கம் உதயகுமார் 01.02.2006           13.06.2007
திருமதி. கலாமதி பத்மராஜா 14.06.2007 16.03.2012
திரு. சீனிவாசன் கிரிதரன் 20.03.2012 12.02.2014
திரு. வெள்ளக்குட்டி தவராஜா 12.02.2014 23.01.2017
திரு. குமாரசிங்கம் குணநாதன் 23.01.2017 31.07.2018
திரு. மாணிக்கவாசகர் தயாபரன் 01.08.2018 03.07.2019
திருமதி .ந.முகுந்தன் 04.07.2019 04.07.2019
திரு. வ.வாசுதேவன் 05.07.2019 31.01.2025
திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம் 03.02.2025  

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top