மண்முனை வடக்குப் பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலை மன்றங்களும் இணைந்து நடத்திய கலைக்கதம்பம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 19.12.2023 மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.



மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் திருமதி.ல.பிரஷாந்தன், மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஆ.நவேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது நடனம், பாடல்கள், கவிதை, பறங்கியர் நடனம் மற்றும் முஸ்லீம் மாணவர்களின் பாடல்கள் போன்ற நிகழ்வுகள் அரங்கேறின.




இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.





மண்முனை வடக்கு பிரதேச செயலகமும், மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய இலக்கிய விழா 2023.12.08.ம் திகதி அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது.


பிரதேச செயலாளர் வ . வாசுதேவன் தலைமையில் நடை பெற்ற இலக்கிய விழாவில் உதவி பிரதேச செயலாளர் லட்சனியா பிரசாந்தன் ,உதவி திட்டமில் பணிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




மும்மொழிகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் எழுத்தாளர்களும் ,கவிஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.





மண்முனை வடக்குப் பிரதேச செயலக பதவிநிலை அணியினர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வானது 07.12.2023 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வணபிதா அன்னதாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் மேலும் வணபிதா ராஜரெட்ணம் பாலன் யேசுவின் பிறப்புத் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
இதன்போது மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.





















மண்முனை வடக்கு பிரதேச செயலக வாணி விழா நிகழ்வானது 23.10.2023 திங்கட்கிழமை பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

























