17.11.2024 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவி செல்வி.சுஜீவா அவர்களின் தலைமையில் கல்லடி கடற்கரை மற்றும் திருச்செந்தூர் கோவில் வரையிலான பகுதியில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் என்ற தொனிப்பொருளில் சிரமதானப்பணி ஒன்று இடம்பெற்றது.


இதன் போது மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி.நிஷாந்தினி அருள்மொழி அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு.சசிகுமார் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு.தயாசீலன் அவர்களும் இதில் கலந்து கொண்டனர்.


அத்தோடு இந்நிகழ்விற்கான பங்களிப்பினை ஜனாதக்ஷன் அமைப்பானது வழங்கியிருந்தது, அவ் அமைப்பின் கள உத்தியோகத்தர் பெலிஸ்ட்டா மதுவந்தி இயற்கைமொழி அமைப்பின் ஸ்தாபகர் திருமதி காயத்ரி அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து சுற்று சூழலியல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரசாந்தினி அவர்களும் கலந்துகொண்டனர்.


மண்முனை வடக்கு பிரதேச சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு மண்முனை வடக்கிலிருந்து மொத்தமாக 45க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தபட்ட மாற்றுதிறனாளிகளுக்கான சுயசக்தி அபிமானி நிகழ்ச்சி திட்டத்தில் எமது பிர தேச செயலகத்தை சேர்ந்த கிரிஸ்ரிதாஸ் அவர்கள் தேசிய மட்டத்தில் தெரிவாகி 07.11.2024 அன்று இசுறுபாய, பத்தரமுல்லயில் கெளரவிப்பு நடைபெற்றது.



மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சமுர்த்தி திணைக்களமும் இணைந்து உலக சிறுவர் முதியோர் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் 01.10.2024 இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.

"பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்'' மற்றும் உலகளாவிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான வலுவான பராமரிப்பு மற்றும் "ஆதரவுடன் முதியோர்களை கௌரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் இந் நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எமது நாட்டின் எதிர்கால தலைவர்களாகிய சிறார்களுக்கான கல்வியை நாம் அனைவரும் பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும் என்பதுடன் இந்த சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றிய சிரேஸ்ட பிரஜைகளை கனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.


இதன் போது கருத்து தெரிவித்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் நற்பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு பெற்றோர்கள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என கருத்து பகிர்ந்தார்.

ஷேன் பாலர் பாடசாலை சிறார்களினால் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. மேலும் தெரிவு செய்யபட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பிரணவசோதி, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் வி.பிறைசூடி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


இதன் போது முதியோர்களினால் பாடல்கள் இயற்றப்பட்டு இசைக்கப்பட்டதுடன் மேலும் இவர்களினால் சம்பாசனை நாடகமும் அரங்கேற்றப்பட்டது. வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்கா நிறுவனத்தினரினால் சிறார்கள் விரும்பும் அழகிய ஓவியங்கள் வரைந்து வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக வாணி விழா நிகழ்வானது 10.10.2024 அன்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன்இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவ மாணவிகளது கலை நிகழ்வுகளும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.









30.05.2024 தொடக்கம் 05.062024 வரையான காலப்பகுதி சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முறையே 31.05.2024 மட் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடும் , 03.06.2024 இருதயபுரம் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சுற்றாடல் சுத்தப்படுத்தலும், 04.06.2024 திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக 05.06.2024 நேற்று உலக சுற்றாடல் தினத்தை (நிலம் மறுசீரமைப்பு வறட்சியை தாங்கும் தன்மை) எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினரோடு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமூர்த்தி திணைக்களமும் இணைந்து பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் இருதயபுரம் கிழக்கு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றாடல் தினம் சிறப்பிக்கப்பட்டது .


இந் நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, சிவில் பொலிஸ் ஒருங்கிணைப்பாளர் பொலிஸ் உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பழ மரங்களும் நடுகை செய்யப்பட்டன.












