சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் "புகையிலை உற்பத்தி நிறுவனத்தின் தலையீட்டிலிருந்து நமது பிள்ளைகளையும் இளைஞர்களையும் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி 31.05.2024 நடாத்தப்பட்டது.

















