Food Carts for differently abled persons handed over by Assistant Divisional Secretary was held on January 30,2025, at the office premises.

Eight Food Carts for differently abled persons handed over by Assistant Divisional Secretary of Manmunai North Mrs. Suba Sathaharan.



The Annual Thai Pongal Vizha for the Manmunai North Divisional Secretariat was held on January 24, 2025, at the office premises.












மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு 01.01.2025 அன்று Clean Sri Lanka எனும் தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்ததான கருப்பொருளில் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.



இதன்போது பால் காய்ச்சும் சம்பிரதாயத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகி அதனை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும் நாட்டுக்காக உயிர் நித்தவர்களை நினைவுகூரும் முகமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அதனை தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் சேவை உறுதியுரையும் செய்துகொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக சனாதிபதி செயலகத்திலிருந்து ஒளிபரப்பப்பட்ட Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய நிகழ்விலும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


"அழகான நாடு ,புன்னகைக்கும் மக்கள்" எனும் கருத்திட்டத்தின் கீழ் 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வானது (2025/01/20)பிரதேச செயலாளர் திரு வன்னியசிங்கம் வாசுதேவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் முக்கிய அம்சங்களான சூழல்சார் நிலைபேறான தன்மை, சமூக திறன் மேம்பாடு, ஆட்சி நிலைபேறான தன்மை மற்றும் பொருளாதார நிலைபேறான தன்மை ஆகியனவற்றை மேம்படுத்தல் தொடர்பாகவும், அவற்றை அடைவதற்கான இலக்குகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டதுடன்,'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் அடிப்படையான விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் பொது மக்களின் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் வினைத்திறனாக பணியாற்ற வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் அவர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளாராக கடமையாற்றி திட்டமிடல் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று செல்லவுள்ள திருமதி. ஜெ .கணேசமூர்த்தி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்க ஏற்பாட்டில் 30.12.2024 அன்று டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.


















