மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உள்ளுர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி 09.04.2025 பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ex01
ex02

ex03

ex1

ex2

ex4

ex5

ex6இந்நிகழ்வு காலை 9.30 முதல் பி.ப 5.00 மணி வரை இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சியாளர்கள் பல்வேறு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தனர்.

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்ட செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனையின் கீழ் மேலதிக அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ்(04.04.2025) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
tr34
tr35
tr36
tr37
tr38இச் செயலமர்வின் வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் கலந்து கொண்டார்.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
tr39
tr40
tr41
 ஊழல் பற்றி இலங்கையின் சட்ட ரீதியான பொருள் கோடல் தொடர்பான விளக்கங்கள், 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.அத்துடன் ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள் மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம், ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் மேலும் நடைமுறைசார் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விடய ஆய்வுகள் மூலம் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச நாடகதினத்தை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான நாடகப் பயிற்சி நெறியானது மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் 27.03.2025 பிரதேச செயலக மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
c8
c1
c2
c4
c6
இந்நிகழ்வின் வளவாளராக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் தற்காலிக உதவி விரிவுரையாளர் திரு.ரவிச்சந்திரன் விநோகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்க ம் மாலை 12.00 மணி வரை இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக ஸ்ரீ ராஜகணபதி ஆலய சங்காபிஷேக நிகழ்வானது 01.04.2025 அன்று சதுர்த்தி நன்னாளில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக இடம்பெற்றது.

kov f

kov2

kov2.1

kov2.2

kov2.3

kov3

kov4

kov5

kov15

kov17.1

kov19

kov22

இந் நிகழ்வு மட்டக்களப்பு ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து பிரதேச செயலக ராஜகணபதி ஆலயம் வரை உத்தியோகத்தர்களின் பாற்குட பவனியுடன் ஆரம்பமானது. விஜயசக்தியின் நடனாஞ்சலி, கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவியின் கதாப்பிரசங்கம், பஜனை போன்ற கலை நிகழ்வுகளால் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.அன்னதானத்துடன் உற்சவம் சிறப்பாக நிறைவுற்றது.

அரச உத்தியோகத்தர்களுக்கான உற்பத்தி திறன் 5S தொடர்பான பயிற்சி நெறியானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் 27.03.2025 பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
tr16
tr18
tr21
tr22
tr24
tr26
tr27
tr28tr29
tr30tr31இந்நிகழ்வின் வளவாளராக மண்முனை தென் எருவில் பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன் அவர்களும் திருமதி.மிர்னாளினி பிரபாகரன் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அலுவலகத்தின் பதவி நிலை உதவியாளர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top