மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒளிவிழா 2024.12.13 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.




மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வணபிதா பிலிப் ரஞ்சன்குமார் , மற்றும் வணபிதா வினோத் சபாபதி பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தினரின் கரோல் கீதங்கள், நடன நிகழ்வு மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தினரின் சிறார்களின் நடன நிகழ்வு மற்றும் பாலன் யேசுவின் பிறப்பு பற்றிய குழு நாடகமும் அரங்கேற்றப்பட்டன.
















