இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வானது "புதிய தேசம் அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் 04.02.2024 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.





இதன் போது தேசியக் கொடி பிரதேச செயலாளரால் ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதினை தொடர்ந்து மூலிகைப்பயிர்கள் மற்றும் மரக்கன்றுகள்என்பன நடப்பட்டது.



இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் சகலஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.













