நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்குடன் சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளரின் தலைமையின் கீழ் மூலிகை பாணம் 29.07.2020 திகதியன்று வழங்கப்பட்டது.

                               

                              

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையில் 72வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

image

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

நாட்டுக்காக உயிர்நீர்த்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மும்மதங்களின் வழிபாடுகள் நடைபெற்றன.

image2

image3

பசுமையான நாட்டினை கட்டியெழுப்புவோம் என்னும் திட்டத்திற்கு அமைய மர நடுகையும் சிரமதான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பிரதேச செயலகத்தில் இலங்கையின் தேசிய மரமான நாக மரத்தின் மரக்கன்று ஒன்றும் பிரதேச செயலகத்தில் நடப்பட்டது.

image4
மர நடுகையினை தொடர்ந்து சுற்றாடலின் தூய்மையினை பேணும் பொருட்டு சிரமதான நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

image5

புதிய ஆண்டில் அரச அலுவலகங்களில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுகள் 1st January 2020 காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

IMG 7676

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு,தேசிய கீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களின் அரசாங்க சேவை சத்திய பிரமான உறுதி மொழியினையும் பெற்று கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

IMG 7671

IMG 7746
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

IMG 7751

IMG 7695

வருடாந்த பொங்கல் விழாவானது 27 ஜனவரி 2020 மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு .வ. வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது.

IMG 1f9e34973c113a860abb2e276ff91e13 V

IMG 1ba8c5c4902776e17b305591381d4d2a V

மேலும் இந்நிகழ்வினை பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பாரம்பரிய முறையில் சிறப்பித்தனர்.

IMG 73d5ce5e8400addaee071032eacdd3d9 V

IMG 9955e1172b46583f4b64664f65cb8fa2 V

IMG dda9cba315ed8c61daff59e7e8ec150a V

IMG f5460df74bf74edaea18afd6b8dcc4f5 V

IMG f5b98a40f2ec1d32b932f1e47a52d233 V

அதனைத்தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாச்சார கூடமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், வேறு பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளர்,உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம் பெரும் தொன்மையினை பிரதிபலிக்கின்ற பொருட்கள் மற்றும் கலை கலாச்சாரத்துடன் தொடர்பான பொருட்கள் இக் காட்சிக் கூடத்தில் காணப்படுகின்றது.

DSC 0768

IMG 578f7466f98d5173459a35258bee6b81 V

DSC 0781

DSC 0798

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15வது ஆண்டு நிறைவாகியுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் 26th December 2019 அனுஸ்டிக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

IMG 0817

தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 0823

IMG 0824

IMG 0820

IMG 0822

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top