மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மக்கள் வங்கியும் இணைந்து ஏற்பாடுசெய்த சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டி சவாரி October 1st 2019 நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் சிறுவர்களின் கலைநிகழ்வு, நாடகம்,விவாதம் போன்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயக்குமார் கலந்து சிறப்பித்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.















