சர்வதேச சிறுவர் தினமாகிய 01.10.2021 அன்று "பட்டினியற்ற, மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை கட்டியெழுப்புதல்" எனும் தொனிப்பொருளில்  நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் செயற்திட்டமாக நாடளாவிய ரீதியில் 100,000 பலா மரக்கன்றுகள் நடும் செயல் திட்டத்திற்கு அமைவாக எமது பிரதேச செயலகப்பிரிவில் 300 பலா மரக்கன்றுகள் சிறுவர் கழகத்தைச் சேர்ந்த சிறுவர்களால் நடப்பட்டது.

1

3

2

4

5

6

7

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவனின் ஏற்பாட்டில் பெண்கள் தொர்பான விடயங்களில் கவனஞ்செலுத்தும் பெண்கள் அமைப்புக்களின் பங்குபற்றுதலுன் “நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 08.03.2021 பிரதேச செயலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதன்போது பிரதம அதியாக அரசாங்க அதிபர் கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.

1 2

 

 

 

 

 

 

 

 மேலும் மட்டக்களப்பில் செயற்பட்டுவரும் பெண்கள் அமைப்புகளான காவியா, அருவி, நியூ அரோ, சூரியா, எஸ்கோ, மகளிர் அபிவிருத்தி ஒன்றியம், உளநல மையம், மகளிர் மகா சங்கம் மற்றும் மாவட்ட மகளிர் சம்மேளனம் என்பன இணைந்து இம்மகளிர் தின கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது மகளிரின் துவிச்சக்கர சவாரி, பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும், விழிப்பூட்டல் ஊர்வலம் மற்றும் துண்டுப் பிரசுர விநியோகம் உட்பட அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

3

4

5

6

7

8

9

இதுதவிர நன்வெமு ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்திலான தையல் இயந்திரம் மற்றும் நியூ அரோ பெண்கள் அமைப்பினால் பெண்களின் பொருளாதார மேம்பாடு எனும் செயற்றிட்டத்திலான தையல் இயந்திரம் என்பன பயனாளிகளுக்கு இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள்,கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட சமுர்த்தி தலைமை முகாமையாளர் , சமுர்த்தி முகாமையாளர் , மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பெண்கள் அமைப்புக்களின் தலைவிகள், உறுப்பினர்கள், பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள், பெண் தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
10
11
12
13
14
15

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top