மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு 02.01.2023 காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கமைவாக(30/2022) சேவை உறுதியுரையும் செய்துகொண்டனர்.















