”நற்பண்பு மிக்க அழகிய உலகம் ஒன்றினை கட்டியெழுப்புவோம் ‘ எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடத்தும் பிரதேச இலக்கிய விழா நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச இலக்கிய விழாவுக்கான அதிதிகள் வரவேற்புடன் மங்கள விளகேற்றப்பட்டு ஆரம்பமான பிரதேச இலக்கிய விழா நிகழ்வில் கலாசார மத்திய நிலைய மாணவர்களின் வரவேற்பு நடனம், மாணவர்களின் கதைகூறல் மற்றும் அதிதிகள் சிறப்புரைகள் இடம்பெற்றது.

2022ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழாவினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் ,எழுத்தாளர்கள்,கலைஞர்கள் இடையில் நடாத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள்,கலைஞர்கள்,எழுத்தாளர்களுக்கும் பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் ,சிறப்பு அதிதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர் கே.சுஜாதா குலேந்திரகுமார் ,உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் ,பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் பிரதம கணக்காளர்,கிராம நிர்வாக உத்தியோகத்தர்,மண்முன வடக்கு பிரதேச செயலக பிரிவு அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள், பெறோர்கள் கலந்துகொண்டனர்.

Cultural

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top