இந்து கலாசார திணைக்கள அனுசரணையுடன்,மாவடிப்பிள்ளையார் ஆலயத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சிவராத்திரி விழா நடாத்தப்பட்டது.கலாசார பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு 26.02.2025 ஆம் திகதி பி.ப 6.30 மணிக்கு சக்தி அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.
ஆலய பிரதமகுரு, ஆலய நிர்வாகத்தினர், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்ட*மகா சிவராத்திரி விழா* நிகழ்வுகளின் பதிவுகள்.

















































