மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடத்திய மாபெரும் மகளிர் தின விழா - 2025
எதிர்காலத்தை கட்டியெழுப்ப வலிமையான பெண் தான் வழிகாட்டி" என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெறுகின்ற தேசிய மகளிர் தின நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மகளிர் தின நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் (07.03.2025) கோட்டமுனை மெதடிஸ்த தேவாலய முன்றில் பி.ப 2:30 மணிக்கு நடைபெற்றது.



மும்மத இறைவணக்கத்துடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் அவர்களின் வரவேற்பு உரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.விஸ்வ பரதகலாலயா நாட்டிய பள்ளி மற்றும் நிருத்திய கலாலய மாணவர்களின் நடனங்கள், கலாசார மத்திய நிலைய கலைஞர்களின் நாடகம், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் என்பன மகளிர் தினத்தை அலங்கரித்தன .



பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இடம் பெற்றது.கலந்துகொண்ட உத்தியோகத்தர்களையும், மகளிர் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களையும் களிப்பூட்டும் வகையில் வினோத விளையாட்டுக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திர சோதி ஜெயதீஸ்வரன் அவர்களின் நன்றி உரையுடன் மகளிர் தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.



நிகழ்வு 04 - உணர்வுகளை கையாளும் செயலமர்வு
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்பட்டது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையிலும் வழிகாட்டலில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.


இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில்(06.03.2025) கட்டிளமை பருவ யுவதிகளுக்கு கட்டிளமை பருவத்து உணர்ச்சிகளை சாதகமாக கையாளுதல் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் உள நல வைத்தியர் யூடி ரமேஷ் ஜெயகுமார் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக சமூக பாதுகாப்பு சபை இணைப்பாளர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களால் ஆரக்சாவ மற்றும் சுரக்ஷாவ காப்புறுதி திட்டம் தொடர்பிலும் அதன் நன்மைகள் தொடர்பிலும் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வு 02 - ஆயுர்வேத மருத்துவ முகாம்
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்பட்டது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில்(05.03.2025) மண்டபத்தில் நிகழ்வு 02 இடம்பெற்றது.

"ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு ஒரு பலம் " எனும் தொனிப்பொருளுக்கமைய ஆயுள் வேத மருத்துவ முகாம் இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.இதில் பிரதேச மக்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் தங்களுக்கான சிகிச்சையினைப் பெற்றுக்கொண்டனர்.ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர்கள் மருத்துவசேவையை வழங்கியிருந்தனர்.

நிகழ்வு 03 - மனவெழுச்சி ஆற்றுகை
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்பட்டது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் (06.03.2025) மண்டபத்தில் நிகழ்வு 03 இடம்பெற்றது


"வினைத்திறன் மிக்க தொழிற்படை ஒன்று கௌரவமான தொழில் ஒன்று" எனும் தொனிப் பொருளுக்கமைய தொழில் புரியும் இடத்தில் வன்முறையற்ற தொழில் திருப்தியை உறுதி செய்ய நிறுவன கட்டமைப்பினை உருவாக்கும் நோக்குடன் மனவெழுச்சி ஆற்றுகை நிகழ்வு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுககு இடம் பெற்றது.


இந்நிகழ்வின் வளவாளர்களாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ப.ராஜதிலகன் அவர்களும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிந்து உஷா அவர்களும் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.


நிகழ்வு 01 - கருத்தாடல் களம் - பெரியோர்களும் இளையோர்களும்
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்பட்டது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் (05.03.2025) டேபா மண்டபத்தில் நிகழ்வு 01 இடம்பெற்றது.

"களிப்பூட்டுவதன் மூலம் மகிழ்ச்சியான குடுமபத்தை கட்டியெழுப்புவோம் " எனும் திட்டத்திற்கு அமைவாக இன்று இளையோர் முதியோர்களுக்கிடையிலான கருத்து முரண்பாட்டினை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் கருத்தாடல் நிகழ்வு இடம் பெற்றது.இக் கருத்தாடல் நிகழ்வில் மட்டக்களப்பு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் மகளிர் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.













