மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச காணிகளில் காணப்படும் தீர்க்கப்படாத காணிப் பிணக்குகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணி தொடர்பான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

mo1

mo5

இந் நடமாடும் சேவையானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கமைவாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் ஏற்பாட்டில் 13.07.2023 திகதி பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது.

mo2

 

கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி.தசநாயக்கவின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற நடமாடும் சேவையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

mo3

 

இதன் போது காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகள், அரச குத்தகை காணிகள் போன்ற காணிப் பிணக்குகளுக்கு இதன் போது அதிகாரிகளினால் இயலுமானவரை தீர்வுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், மாவட்ட காணி அலுவலக உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர், மண்முனை வடக்கு நிருவாக உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தர்) மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

mo4

mo6

News & Events

23
May2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
May2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top