மண்முனை வடக்குப் பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலை மன்றங்களும் இணைந்து நடத்திய கலைக்கதம்பம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 19.12.2023 மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

KK1

KK2
KK3
மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் திருமதி.ல.பிரஷாந்தன்,  மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஆ.நவேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

KK4
KK5


இதன்போது நடனம், பாடல்கள், கவிதை, பறங்கியர் நடனம் மற்றும் முஸ்லீம் மாணவர்களின் பாடல்கள்  போன்ற நிகழ்வுகள் அரங்கேறின.

KK6
KK7

KK8

KK9


இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

KK10

KK11

KK12

 

KK13

KK14

மண்முனை வடக்கு பிரதேச  செயலகமும், மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய இலக்கிய விழா 2023.12.08.ம் திகதி அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது.

IV2

 IV3

பிரதேச செயலாளர் வ . வாசுதேவன் தலைமையில் நடை பெற்ற இலக்கிய விழாவில் உதவி பிரதேச செயலாளர் லட்சனியா  பிரசாந்தன் ,உதவி திட்டமில் பணிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் பெற்றோர்கள் என  பலரும் கலந்து கொண்டனர்.

IV4

IV5

IV6

IV9

மும்மொழிகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் எழுத்தாளர்களும் ,கவிஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

IV7

IV8

IV10

IV11

 

h3
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நொச்சிமுனை கிராம சக்தி மக்கள் சங்கத்தினரின் கைத்தறி உற்பத்தி கிராம திறப்பு விழா 24.10.2023ம் திகதி நொச்சிமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
 
h7
"ஒரு கிராமத்திற்கு ஒரு உற்பத்தி இடம்பெறல்" எனும் தொனிப்பொருளில் நொச்சிமுனை பிரிவில் கைத்தொழில் கிராமத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் அப்பகுதியில் ஏற்படும் சமூக சீர்கேடுகளில் இருந்து மக்களையும் இளைஞர்களையும் சமூகத்தையும் பாதுகாத்து குடிசைக் கைத்தொழிலை மேம்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
 
h1
 
h2
 
h4
கிராம சக்தி மக்கள் சங்க உறுப்பினர்கள் ஏறத்தாழ 20 பேர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். இதற்குத் தேவையான பயிற்சிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மூலப்பொருட்களை கிராமிய தொழில் துறை திணைக்களம் வழங்குவதுடன் அவற்றிற்குரிய சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.
h5
 
h6
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய தொழில் துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி.ரிசாணா சாரங்கன் மற்றும் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி அவர்களும் திருவள்ளுவர் சிக்கன கூட்டுறவுச் சங்கம், மகளீர் மேம்பாட்டு அமைப்பு, கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கல்லடி, நொச்சிமுனை, நாவற்குடா கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

Oli1 1

மண்முனை வடக்குப் பிரதேச செயலக பதவிநிலை அணியினர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வானது 07.12.2023 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வணபிதா அன்னதாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் மேலும் வணபிதா ராஜரெட்ணம் பாலன் யேசுவின் பிறப்புத் தொடர்பில் சிறப்புரையாற்றினார். 

இதன்போது மண்முனை  வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில்  வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி  வைக்கப்பட்டது.

Oli1 4

IMG 20231207 WA0032

IMG 20231207 WA0042

IMG 20231207 WA0038

IMG 20231211 WA0010

IMG 20231211 WA0011

IMG 20231211 WA0009

oli1

oli2

oli3

oli4

Oli1 3

oli5

 oli6

oli7

oli8

oli9

oli10

oli11

oli12

Oli1 2

மண்முனை வடக்கு பிரதேச செயலக வாணி விழா நிகழ்வானது 23.10.2023 திங்கட்கிழமை பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்    தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

 1  2

3    4

5  6

7

 

 98

10           11           12 

          

                                                       13                                  14

News & Events

23
May2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
May2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top