மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழாவானது 26.04.2023 திகதி பாட்டாளிபுரம் மைதானத்திலும் 27.04.2023 ம் திகதி வெபர் மைதானத்திலும் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைய் தொடர்ந்து. உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இதில் எல்லே, கிரிக்கட், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம், தேங்காய் துருவுதல்,முட்டி உடைத்தல், சாக்கு ஓட்டம், வேக நடை ஆண்கள், பெண்கள், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், சங்கீதக் கதிரை, கலப்பு அஞ்சல் ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இவ்விளையாட்டு போட்டியில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக உத்தியோகத்தர் கிராம சேவை உள்ளிட்ட சக அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.இதில் கணக்காளர் தலைமையிலான MN Warriors அணியானது முதலிடமும் உதவி பிரதேச செயலாளர்கள் தலைமையிலான Brave Heart, MN Eagles முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.



















Divisional Coordinating Committee meeting was held on 19.04.2023 at Manmunai North Divisional Secretariat Derba Hall.




















"பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்றதொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று 20.03.2023 திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் மக்களுக்கும் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் வகையிலான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றினைமட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினர் சி.பி.எம் நிறுவனத்தின நிதி அனுசரணையுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கொக்குவில் கிராமத்தில் அரங்கேற்றியிருந்தனர்.

இந்நிகழ்விற்கு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் செ.பிறின்ஸ் அலெக்ஸ்தலைமை தாங்கி நடாத்திய நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுகசேவை உத்தியோகத்தர் ராஜ்மோகன், பிரதேச செயலக சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பிரசாந்தி, மாற்றத்திறனாளிஅமைப்பினர், வை.எம.சீ.ஏ உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வீதி நாடகத்தினை கதிரவன் நாடக குழுவினருடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து வழங்கியிருந்ததுடன் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டன.இவ்வீதி நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.















