தேசிய முன்பிள்ளை பருவ வாரத்தை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு பாலர் பாடசாலையில் இருந்து புதிதாக முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள குடும்ப வருமானம் குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக Derba மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.








மாற்று திறனாளிகளுக்கான சுய சக்தி அபிமானி மற்றும் தேசிய தடகள விளையாட்டு மாவட்ட மட்ட போட்டிக்கான சான்றிதழ்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் 30.08.2022 பிரதேச செயலக Derba மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமூக பராமரிப்பு உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

















மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குழுவினர் மட்டக்களப்புக்கு களவிஜயம் மேற்கொண்டனர்.
மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
மன்னார் மாவட்ட எ .டி . ஆர் .எ . நிறுவனம் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலக மட்டத்தில் பிரதேச செயலகத்துடன் இணைந்து உற்பத்தி திறன் மேம்பாடு தொடர்பான பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
உற்பத்தி திறன் செயல்திட்டத்தில் தேசிய மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயல்பாடுகள் அதன் ஒழுங்குமுறைகள் மற்றும் அதன் நடைமுறைகள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில் மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலாளர் எம் .ஸ்ரீஸ்கந்தகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவினர் பிரதேச செயலகத்து கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர் .
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த உத்தியோகத்தர்களை வரவேற்கும் கலந்துரையாடல்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதன் போது உதவி பிரதேச செயலாளர்கள் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , பிரதேச செயலக கணக்காளர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் இன்று (23.08.2022) அறுவடை செய்யப்பட்டது.





Beach Volleyball Men - Manmunai North Division Champion
Beach Volleyball Men - Manmunai North Division Champion
Beach Kabbadi Team Men - Manmunai North Division Champion
Chess Competition Men Team Batticaloa - District Runner Up
Netball Women Competition - Manmunai North Division Runner Up
Basketball Competition - Manmunai North Division Men Team Champion Women Team Runner Up

















