சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் 2022/2023 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட  பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மண்முனை வடக்குப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05.01.2024) பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாவுல் ஹக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிரணவ ஜோதி  மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


Spo1

Spo2

Spo3

Spo4

Spo5

இதன்போது  47 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட பெண்கள் கிரிக்கெட் அணி, ஆண்களுக்கான கராத்தேப் போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினைப் பெற்று வெற்றியீட்டிய ஆர்.துஷ்யந்தன்,  பெண்களுக்கான தைக்வொண்டா 73 kg நிறைப் பிரிவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட எஸ்.நிலுக்ஷகா, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த  எவ்.டியான் ஸ்ரித், எவ்.டியான் பிறிடோ மற்றும் ஐ.கெல்வின் கிசோ, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய மூத்தோருக்கான மெய்வல்லுனர் போட்டியில் 55- 59 வயதுப் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி மூன்றாம் இடத்தைப் பெற்ற மாவட்டப் பயிற்றுவிப்பாளர் பி.ஜெயக்குமார்  ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

Spo6

Spo7

Spo8

Spo9

Spo10

அத்தோடு இச்சாதனைகள் படைக்க பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களும் கௌரவம் பெற்றனர். அந்த வகையில் பயிற்சியாளர்களான கிரிக்கெட்- ரி.பிரசாத் மற்றும் அ.சிவகுமார், கராத்தே- எச்.ஆர்.சில்வா, தைக்கொண்டா- கௌசிகன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களும் கௌரவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spo11

Spo12

Spo13

Spo14

Spo15

 

 

News & Events

23
මැයි2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
මැයි2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top